மாநாடு படத்தை தெலுங்கில் டப்பிங் வெர்ஷனை வெளியிடுவதா அல்லது ரீமேக் உரிமையைக் கொடுப்பதா என்ற குழப்பத்தில் உள்ளாராம் தயாரிப்பாளர்.
சிம்புவின் மாநாடு படம் பல்வேறு தடைகளை தாண்டி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று திடீரென படம் ரிலீஸாகாது என சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அதற்கு அவர் பைனான்சியருக்கு தரவேண்டிய பணத்தைக் கொடுக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது. எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்தாலும் இதுவரை மாநாடு படத்தால் சுரேஷ் காமாட்சிக்கு இன்னும் லாபம் வரவில்லையாம்.
இந்நிலையில் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமைக்கு நல்ல விலைக் கிடைக்கும் சூழல் உள்ளதாம். ஆனால் படத்தை ஏற்கனவே டப் செய்து வைத்திருக்கிறார்கள். டப்பிங் வெர்ஷனை கொடுத்தால் தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் கிடைக்காது. ஆனால் ரீமேக் உரிமையை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் இப்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளாராம்.