Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜகமே தந்திரம் ரிலீஸா இல்லையா? குழப்பத்தில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:36 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தினை பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று அமேசான் ப்ரைம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தனுஷும் தயாரிப்பு தரப்பும் படத்தை திரையரங்கிலேயே ரிலிஸ் செய்வது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இப்போது படத்தை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரையில் அதற்கான எந்த பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. அதனால் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலிஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!

சூர்யாவின் பாலிவுட் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments