பிரபல இயக்குனரும் நடிகை நயன்தாராவின் கணவரும் ஆன விக்னேஷ் சிவன் திடீரென ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது திருமண வீடியோவை வெளியிட்ட நிலையில், அந்த வீடியோவில் தனுஷ் தயாரித்த "நானும் ரவுடிதான்" படத்தின் காட்சிகளை இணைத்ததாக கூறப்பட்டது.
இது குறித்து, தனுஷ் மீது குற்றம் சாட்டி நயன்தாரா மூன்று பக்க அறிக்கை வெளியிட்டார். இதனால், தனுஷ் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில், தனுஷ் ரூபாய் 10 கோடி கேட்டு நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், விக்னேஷ் சிவன் தான் நயன்தாராவை தூண்டிவிட்டு மூன்று பக்க அறிக்கை வெளியிட சொன்னதாகவும், அந்த அறிக்கையில் உள்ள வாசகங்கள் அனைத்துமே விக்னேஷ் சிவனின் எழுத்து எனவும் விமர்சிக்கப்பட்டது. இதனால், தனுஷ் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், நேற்று முதல் திடீரென விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தை டிஆக்டிவேட் செய்துள்ளார். என்ன காரணம் என்பதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், அவரது திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர் இன்னும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.