Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவேகம்' படம் மீது அந்த ஆங்கில ஊடகத்திற்கு அப்படி என்ன கோபம்?

, ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (06:46 IST)
சினிமா சம்மந்தப்பட்ட செய்திகளை தரும் ஆங்கில இணையதளம் ஒன்று ஒவ்வொரு வருடமும் திரைக்கலைஞர்களுக்கு மெடல் கொடுத்து கெளரவப்படுத்தும். சினிமா ரசிகர்கள் நல்ல மரியாதை வைத்திருந்த அந்த ஊடகத்தை இன்று பலர் வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். காரணம் 'விவேகம்' படத்திற்கு வேண்டுமென்றே நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுத்து வருகிறது.

 
'விவேகம்' படம் ரிலீஸ் ஆன ஒருசில மணிநேரத்தில் விமர்சனம் பதிவு செய்த அந்த ஊடகம், படத்திற்கு 2 மார்க் மட்டுமே கொடுத்தது மட்டுமின்றி தனது நெகட்டிவ் விமர்சனத்தை பதினாறு முறை டுவிட்டரில் மீண்டும் மீண்டும் பதிவு செய்துள்ளது.
 
எந்த ஒரு டுவீட்டையும் இதற்கு முன் இருதடவைக்கு மேல் டுவிட்டரில் பதிவு செய்யாத இந்த ஊடகம் அஜித் மீது தனிப்பட்ட பகைமையை இதன்மூலம் காட்டியுள்ளது. இந்த ஊடகத்தில் பணிபுரிந்து முன்னாள் ஊழியர்கள் சிலர் டுவிட்டரில், 'இந்த ஊடகத்தில் பணிபுரிந்ததற்காக வெட்கப்படுகிறேன்' என்று பதிவு செய்யும் அளவுக்கு இந்த ஊடகத்தின் நிலை உள்ளது. பெய்டு டுவிட்டர்கள் போல பெய்டு ஊடகமாக இந்த ஊடகம் மாறிவிட்டதோ என்ற ஆதங்கம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலியால் முதல்முறையாக வெறுப்புகளை சம்பாதித்த விஜய் டிவி