Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் இருந்து சுசியை வெளியேற்ற இதுதான் காரணமா?

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:26 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் சற்றுமுன் வெளிவந்துள்ளது. வெளியேற்றப்பட்ட போட்டியாளர் சுசி தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சுசி வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டாலும் உண்மையில் அனிதாவுக்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் ஆனால் சுசியை வேறு ஒரு காரணத்திற்காக பிக்பாஸ் குழுவினர் குறைந்த வாக்குகள் பெற்றதாக அறிவித்து வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து சுசியை வெளியேற்ற இதுதான் காரணமா?
ஏற்கனவே குவாரண்டைன் நேரத்தில் சுசி திடீரென நள்ளிரவில் அலறியபடி வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். அதேபோல் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதும் திடீர் திடீரென அலறியதாகவும், பிக்பாஸ் உடன் அடிக்கடி பேச வேண்டும் என்றும் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு நச்சரித்ததாகவும் இதனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்க லாயக்கு இல்லை என்று முடிவு செய்த பிக்பாஸ் குழுவினர் அனிதாவை விட அதிக ஓட்டுகள் பெற்று இருந்தாலும் அவரை வெளியேற்ற முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் கழித்து வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த சுசி இன்று வெளியேற்றப்பட்டு இருப்பது அவரது ஆதரவாலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்றைய புரமோவில் கடைசி ஷாட்டில் சுசி தவிர அனைவரும் இருக்கின்றார்கள் என்பதால் சுசி வெளியேறி விட்டது உறுதியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் ‘பாகுபலி 2’ ஸ்டண்ட் கலைஞர்.. ஆச்சரிய தகவல்..!

தொண்டை கிழிய பாட்டு பாடும் ஆதிக் ரவிச்சந்திரன்.. ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!

அழகுப் பதுமையாக மிளுரும் சம்யுக்தா மேனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஷிவானி…!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments