Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக் கான் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டது ஏன்?

ஷாருக் கான் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டது ஏன்?
, புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:56 IST)
ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டதற்கு மும்பையில் தற்போது கடுமையான மழை பெய்துவருவதுதான் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி, KGF வரிசையில் சூர்யா சிறுத்தை சிவா திரைப்படம்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!