Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸில் இருந்து நெட்பிளிக்ஸ் பின்வாங்க என்ன காரணம்?

vinoth
வியாழன், 4 ஏப்ரல் 2024 (10:45 IST)
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் ரிலீஸூக்குப் பிறகு படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ப்ளிக்ஸ் ஓடிடி வெளியீட்டில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நெட்பிளிக்ஸ் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறியது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அது சம்மந்தமாக ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது. அதன்படி “படத்துக்காக 21 நாட்கள் நாங்கள் எடுத்த புட்டேஜ் எல்லாம் காணாமல் போய்விட்டது. அதனால்தான் படம் நாங்கள் எதிர்பார்த்தது போல வரவில்லை” என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஐஸ்வர்யாவின் இந்த பேட்டி படத்தை ரசிகர்கள் பார்ப்பதில் இருந்து தடுக்கும் என நினைத்ததாம். மேலும் அந்த 21 நாட்கள் புட்டேஜை தேடிக்கொடுங்கள் அதை இணைத்து  நாங்கள் வெளியிடுகிறோம் என்ற நிபந்தனையும் வைத்ததாம். ஆனால் அந்த புட்டேஜ் கிடைக்காததால் படத்தை நாங்கள் வெளியிடவில்லை என விலகிக் கொண்டதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

அடுத்த கட்டுரையில்
Show comments