Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிச்ச நடிகரின் டீஸர் ரிலீஸ் தாமதத்துக்கு இதுதான் காரணமாம்…

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (16:15 IST)
வெளிச்ச நடிகர் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்னும் வெளிவராததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.



 

வெளிச்ச நடிகர் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார் பெரிய நம்பர் நடிகையின் தற்போதைய காதலனான அழிக்கும் கடவுளின் பெயரைக் கொண்ட இயக்குநர். படம் இறுதிக்கட்டத்தை எட்டி ஏகப்பட்ட நாட்களாகிவிட்டது. ஆனாலும், இன்னும் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளிவரவில்லை.

எல்லா நடிகர்களும் அடையத் துடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைக் கொண்ட உச்ச நடிகரின் படம் கூட, தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்ட பிறகுதான் ஷூட்டிங் சென்றார்கள். ‘தல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸரும் கூட வெளியாகிவிட்டது. ஆனாலும், அவர்களைவிட குறைவான மார்க்கெட் கொண்ட வெளிச்ச நடிகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கோ, டீஸரோ வெளியிடாமல் பில்டப் காட்டுகின்றனர்.

காரணத்தை விசாரித்தால், பிரபலமான பாலிவுட் படம் ஒன்றைத் தழுவித்தான் இந்தப் படத்தை எடுத்து வருகிறாராம் கடவுள் இயக்குநர். ஆனால், அந்தப் படத்தின் உரிமையை வாங்கி வைத்திருப்பவர் ஹீரோவின் அப்பாவான இயக்குநர் ஒருவர். இப்போது ஃபர்ஸ்ட் லுக்கோ, டீஸரோ வெளியிட்டால் கதை இதுதான் என்பது தெரிந்துவிடும். எனவே, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, அதன்பின்னர் ஃபர்ட்ஸ் லுக், டீஸரை வெளியிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments