Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்‌ஷய் குமாரின் அடுத்தடுத்த ப்ளாப்… கிடப்பில் போடப்பட்ட ஏ ஆர் முருகதாஸின் கனவுப் படம்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (09:12 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு அனிமேட்ரானிக்ஸ் படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த படத்தில் கதாநாயகனோடு ஒரு முக்கிய வேடத்தில் குரங்கு ஒன்று நடிக்க உள்ளதாக இருந்தது. முக்கியமான வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க இருந்தார். ஆனால் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, அக்‌ஷய் குமாரின் பல படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால் தயாரிப்பு நிறுவனம் இப்போது அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டதாம். இதை முருகதாஸே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராம்சரணுக்குத் தோல்விப் படம் கொடுத்ததற்காக வருந்துகிறேன் – தில் ராஜு மனம் திறப்பு!

சல்மான் கானுக்கு அரிய வகை மூளை நோய்… ரசிகர்கள் அதிர்ச்சி!

தவறான நபர்களை நம்பி ஏமாறவேண்டாம் – ‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எச்சரிக்கை!

போதைப் பொருள் வழக்கு… ஜாமீன் கேட்டு ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல்?

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments