Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவின் வெளியேற இந்த மூன்று விஷயங்கள் தான் காரணமா?

Advertiesment
கவின் வெளியேற இந்த மூன்று விஷயங்கள் தான் காரணமா?
, வியாழன், 26 செப்டம்பர் 2019 (09:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த ஞாயிறுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஞாயிறு அன்று ஒருவர் வெளியேறிவிட்டால் மீதியுள்ள ஐவரில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். இருப்பினும் முகினை தவிர இன்னும் இருவர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதி பெறுவார்கள் என்பதால் மீதமுள்ள இருவரும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்
 
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேற கவின் முடிவெடுக்கின்றார். கவின் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததே தன்னுடைய கடனை அடைக்கத்தான் என்றும், கடன் பணம் கிடைத்தவுடன் தான் வெளியேற தயார் என்றும் ஏற்கனவே கூறியிருந்தார்.  இந்த நிலையில் ஐந்து லட்சம் என்பது அவரது குடும்ப கடனை அடைக்க போதுமானதாக அவர் கருதியிருக்கலாம் என்றும் அதன் காரணமாக அவர் வெளியேற முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் கவினுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் டைட்டில் பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தன்னுடைய நண்பர்களில் ஒருவர் வெற்றி பெற வேண்டும், குறிப்பாக தர்ஷன் வெற்றி பெற் வேண்டும் என்பதை அவர் வெளிப்படையாக கூறியதால் நண்பருக்காக விட்டுக்கொடுக்கும் வகையில் வெளியேற முடிவெடுத்திருக்கலாம்
 
மேலும் காதல் விஷயத்தில் தன்னுடைய பெயர் அதிகமாக டேமேஜ் ஆகிவிட்டதால் அந்த ஒரு குற்ற உணர்ச்சியுடன் வெற்றிக்கோப்பையை வாங்க அவரது மனசாட்சி இடம்தர மறுத்திருக்கலாம் என்றும் இந்த மூன்று விஷயங்களுக்காகத்தான் அவர் வெளியேறும் முடிவை எடுத்திருக்கலாம் என்றும் இன்றைய முதல் புரமோவில் இருந்து தெரிய வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் வாங்கிய கடன்: சங்கத்தில் புகார் கூறிய பிரபல தயாரிப்பாளர்!