Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலி படத்தில் பஹத் பாசில் நடிக்காதது ஏன்?... இயக்குனர் லோகேஷ் சொன்ன காரணம்!

vinoth
புதன், 16 ஜூலை 2025 (10:45 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்து விட்டு கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவரளித்த நேர்காணலில் கூலி படத்தில் தனது நண்பரும் நடிகருமான பஹத் பாசில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “இந்த படத்தில் சௌபின் சாஹிர் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க பஹத் பாசிலைதான் கேட்டோம். ஆனால் அவரது கால்ஷீட் பிரச்சனைகள் காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலருக்கு அன்பு முத்தம்!... நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கு நிச்சயதார்த்தம்!

கிறிஸ்துமஸ் தொடங்கி நியூ இயர் வரை Stranger Things திருவிழா! - Final Season ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments