Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருதுநகர் விஷயத்தில் உடன் பிறப்புகள் மெளனம் காப்பது ஏன் ? நடிகை கஸ்தூரி

Advertiesment
விருதுநகர் விஷயத்தில்  உடன் பிறப்புகள் மெளனம் காப்பது ஏன் ? நடிகை கஸ்தூரி
, புதன், 23 மார்ச் 2022 (16:03 IST)
விருதுநகரில் இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , விருது நகர் விஷயத்தில்  உடன் பிறப்புகள் மெளனம் காப்பது ஏன் என நடிகை கஸ்தூரி  கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை  கூட்டாக பலாத்காரம் செய்த  விவகாரம் தமிழகத்தை         உலுக்கி உள்ளது.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மேலும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்று தரப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போலல்லாமல் எப்படி விரைந்து தண்டனை பெற்றுத் தருவது என்பதற்கு இந்தியாவுக்கு இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் விருதுநகர் வன்கொடுமை வழக்கு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில்  நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? பெண்ணின் மானம் காக்க கூட கட்சி பார்த்துதான் குரல் கொடுப்பீர்களா? ராகவன் ஜாதியை  இழுத்தவர்கள் எங்கே, ஹரிஹரன், ஜூனைத் அஹமது , மாடசாமி முதலானோரின் சமூகத்தை பேசுங்க பாப்போம்? #expected எனப் பதிவிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராக்கி இயக்குனர் இயகக்த்தில் தனுஷ்…. படப்பிடிப்பு எப்போது?