Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓவியாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறாரா ஆரவ்?

ஓவியாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறாரா ஆரவ்?
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (23:08 IST)
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே ஓவியாவும் ஆரவ்வும் நெருக்கமாக பழகி வருகின்றனர். ஓவியா பல சமயங்களில் ஆரவ்வை தொட்டு பேசிய போதெல்லாம் அவர் தவறாகவே நினைத்ததில்லை.



 
 
இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஆரவ் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஓவியா அவருக்கு பின்னால் வந்து தோளை தொட்டதை ஒரு பெரிய பிரச்சனையாக ஆரவ் அனைவரிடமும் புகார் கூறி வருகிறார்.
 
ஓவியா தன்னை தொந்தரவு செய்வதாகவும், அவரால் தன்னுடைய சொந்த வாழ்க்கை மற்றும் நடிப்பு வாழ்க்கை ஆகியவை பாதிக்கும் என்று பயமாக இருப்பதாகவும் பிக்பாஸிடம் குற்றம் சாட்டுகிறார். ஆரவ்வுக்கு திரையுலகில் என்ன புகழ் இருக்கின்றது என்பதும், அவரது திரையுலக வாழ்க்கை எந்த அளவுக்கு பிசியாக இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே
 
ஓவியாவுடன் நெருங்கி பழகுகிறார் என்ற காரணத்தால்தான் ஆரவ்வுக்கு இதுநாள் வரை நெட்டிசன்கள் மரியாதை கொடுத்து வந்தனர். ஆனால் இனிமேல் நெட்டிசன்கள் ஆரவ்வை வச்சு செய்வார்கள் என்பது உறுதி. திடீரென ஓவியாவை வெறுத்து ஒதுக்குவதோடு புறங்கூறுவதையும் பார்த்தால் காயத்ரி போன்றோர் அவரை பிரைன்வாஷ் செய்திருக்கலாம் என்றும் ஓவியாவுக்கு ஆரவ் நம்பிக்கை துரோகம் செய்கிறாரோ என்றும்  சந்தேகப்பட தோணுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸையே எதிர்த்து பேசிய ஓவியா!