Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''ராயன்'' படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதியது யார்? செல்வராகவன் விள்ககம்

Advertiesment
''ராயன்'' படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதியது யார்? செல்வராகவன் விள்ககம்

Sinoj

, புதன், 21 பிப்ரவரி 2024 (20:53 IST)
நடிகர் தனுஷின் 50வது படம்  ராயன். இப்படத்தை  அவரே இயக்கி நடித்து வரும்  நிலையில்,. சன்பிக்சர்ஸ்  தயாரித்து வருகிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வரும்  நிலையில்,  நேற்று இப்படத்தின் அடுத்த போஸ்டர் வெளியானது. இப்படம்  தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
 
ஏற்கனவே சந்தீப் கிஸன், காளிதாஸ் ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
 
ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று மாலை வெளியிட்டுள்ளது சன்பிக்சர்ஸ். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
 
இந்த நிலையில்,  இப்படம் குறித்து  இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் கூறியுள்ளதாவது:
 
நண்பர்களே ராயன் படத்திற்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் உலா வருகின்றன.
எனக்கும் ராயன் ஸ்கிரிப்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது முற்றிலும் தனுஷின் கனவு ஸ்கிரிப்ட் இந்த ப்ராஜெக்டில் நான் வெறும் ஒரு நடிகன் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகர் கருணாஸ்!