Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல இயக்குனர் படத்தில் பிரியா வாரியர்?

பிரபல இயக்குனர் படத்தில் பிரியா வாரியர்?
, வியாழன், 12 ஏப்ரல் 2018 (17:12 IST)
நலன் குமாரசாமி இயக்கத்தில் பிரியா வாரியர் ஹிரோயினாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரே ஒரு கண் சிமிட்டலின் மூலம் வைரலானவர் மலையாள நடிகை பிரியாவாரியர். இவர் நடித்து வரும் 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தின் டீசரில் வரும் பாடலில் வகுப்பறையில் சக மாணவனை பார்த்து கண்ணடிப்பது போன்ற காட்சி  இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது.
 
இதன்மூலம் அவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நிறைய படங்கள் ஓப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சூர்யா- கே.வி ஆனந்த் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தில் பிரியா வாரியரை ஹிரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை இயக்குனர் கே.வி ஆனந்த் மறுத்தார்.
 
இந்நிலையில், சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமியின் படத்தில் பிரியா வாரியர் ஹிரோயினாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிச்சா தாங்க மாட்டிங்க: எச்.ராஜாவிற்கு சௌந்தர்ராஜா பதிலடி!