உச்ச நட்சத்திரம் நடித்துள்ள ரோபோ படத்தின் டீஸர் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உச்ச நட்சத்திரம் நடித்துள்ள ரோபோ படத்தின் இரண்டாம் பாகம், ஜனவரி மாதம் இறுதியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த மாதம் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
படத்தின் டீஸர் இந்த மாதமும், டிரெய்லர் அடுத்த மாதமும் ரிலீஸாகும் என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். ஆனால், இந்த மாதம் முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், படத்தின் டீஸர் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.