Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 67 படத்தின் ப்ரோமா எப்போது ரிலீஸ்? மௌனம் காக்கும் படக்குழு!

தளபதி 67 படத்தின் ப்ரோமா எப்போது ரிலீஸ்? மௌனம் காக்கும் படக்குழு!
, வெள்ளி, 30 டிசம்பர் 2022 (16:03 IST)
சமீபத்தில் விஜய்யை வைத்து ஒரு ப்ரோமோவை சில தினங்களுக்கு முன்னர் படமாக்கினார் லோகேஷ்.

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதம் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய், தற்போது குடும்பத்தோடு லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அவர் ஜனவரி 3 ஆம் தேதிதான் இந்தியா திரும்புகிறாராம்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோவாக ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த ப்ரோமோ எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி வாரிசு படத்தின் ரிலீஸுக்குப் பிறகே அந்த வீடியோவை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு? வெளியான லேட்டஸ்ட் தகவல்!