Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘2.0’ ரிலீஸ் தாமதத்துக்கு என்ன காரணம்?

‘2.0’ ரிலீஸ் தாமதத்துக்கு என்ன காரணம்?
, சனி, 22 ஏப்ரல் 2017 (12:17 IST)
இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த ‘2.0’, அடுத்த வருடம் பொங்கல் அல்லது அதற்குப் பிறகு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 61’ தீபாவளிக்கு ரிலீஸ்  ஆகிறது.

 
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. ஏற்கெனவே வெளியான ‘எந்திரன்’  படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என்று ஏற்கெனவே அறிவித்தனர். இந்நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை என்று திடீரென  அறிவித்திருக்கிறார்கள். 
 
அதற்குப் பதிலாக, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ம் தேதிக்குள் படம் ரிலீஸ் ஆகிவிடுமாம். ரோபோ பற்றிய இந்த கதையில், நிறைய வி.எஃப்.எக்ஸ். வேலைகள் இருக்கிறதாம். அந்த வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் தாமதம்  ஆவதால், படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க பெரிய மனுசன்... சத்யராஜை பாராட்டிய கமல்ஹாசன்...