Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் என்ன.. அந்த கடவுளே சொன்னாலும் பண்ண முடியாது! – விடாபிடியாய் நிற்கும் பவா!

Advertiesment
Bigg Boss
, புதன், 4 அக்டோபர் 2023 (16:21 IST)
விஜய் டிவியில் பிரபலமான பிக் பாஸ் தொடரின் ஏழாவது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஹோம்மேட்ஸ் இடையே தகராறுகள் என தொடங்கி விட்ட நிலையில் அந்தக் கூட்டத்துடன் ஒன்றாமல் இருந்து வருகிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை. ஆனால் எல்லாரிடமும் வம்பு இழுத்துக் கொண்டிருக்கும் பிரதீப்பிற்கு பவா மீது ஒரு மரியாதை இருந்து வருகிறது


 
இந்நிலையில் இன்று வழக்கம் போல பவா கதை சொல்ல அதை கேட்ட பிரதீப் கண்கலங்கிவிட்டார். பின்னர் பவாவிடம் பேசிய பிரதீப் ”நீங்கள் என் அது குருவை போன்றவர். உங்களது செருப்பை எடுத்துக்கொண்டு வர சொன்னாலும் நான் என் கையால் எடுத்து வருவேன். நீங்கள் இங்கே சில இடங்களில் எச்சில் துப்புவது போன்ற சில விஷயங்களை செய்கிறீர்கள். அவை எனக்கு பெரிய பிரச்சனையாகப்படவில்லை. ஆனால் இங்கே உள்ளவர்கள் அதை காரணம் காட்டி உங்களை வெளியே அனுப்பி விடுவார்களோ என்று நான் பயப்படுகிறேன்.

இந்த பிக்பாஸ் போட்டி முடியும் வரை இந்த வீட்டில் நீங்கள் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால் தயவுசெய்து இந்த விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கேட்டார்

அதற்கு பவா செல்லதுரை ”இதுதான் என் இயல்பு என் இயல்பை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன். அது பிக்பாஸை சொன்னாலும் சரி.. அந்த ஆண்டவனே சொன்னாலும் சரி.. நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்” என்று விடாப்பிடியாக கூறியுள்ளார். மேலும் ”நான் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது பணத்திற்காகவோ புகழுக்காகவோ அல்ல. எனக்கு ஏற்கனவே நிறைய வாசகர்கள் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் என் மனதில் குடிகொண்டிருக்கும் ஒரு இருள் இந்த வீட்டில் வெளிப்படுமா என்று சோதிக்கத்தான் நான் இங்கே வந்தேன். அப்படி எனக்குள் இருந்து ஒரு இருளை என்னால் கண்டுபிடிக்க முடிந்தால் அதற்காக நான் மிகவும் மகிழ்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோ' ட்ரெய்லர் திரையிடுவதில் திடீர் சிக்கல்.. காவல்துறையினரின் முக்கிய நிபந்தனை..!