Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“ஓவியாவுக்கு என்ன ஆச்சு ப்ரோ?” – பதறிய வெங்கட்பிரபு

Advertiesment
“ஓவியாவுக்கு என்ன ஆச்சு ப்ரோ?” – பதறிய வெங்கட்பிரபு
, சனி, 22 ஜூலை 2017 (11:00 IST)
நேற்று ‘சேவ் ஓவியா’ ட்ரெண்டானதால், ஷூட்டிங்கிற்காக பிஜி தீவில் இருக்கும் வெங்கட்பிரபு, விவரம் தெரியாமல்  பதறியுள்ளார்.
 
 
விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, கடந்த ஒரு மாதமாக தமிழகத்தையே கட்டிப் போட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் மீது ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும், ஏதாவது செய்து நிகழ்ச்சியைப்  பார்க்கவைத்து விடுகின்றனர்.
 
அதிலும், ஓவியா செய்யும் குறும்புத்தனங்கள், ஆண்கள் மட்டுமின்றி பெண்களையும் அவருக்கு ரசிகர்களாக்கி இருக்கிறது. இதனால், அவருக்கு ஏகப்பட்ட ஓட்டுகள் விழுகின்றன. இந்நிலையில், எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் ஓவியாவையே நேற்று அழவைத்துவிட்டனர். அவ்வளவுதான்… புரோமோ பார்த்தே பொங்கி எழுந்தது கூட்டம். ஓவியாவுக்கு ஆதரவாக  ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஏகப்பட்ட பதிவுகள் போடப்பட்டன.
 
தற்செயலாக இதைக் கவனித்த இயக்குனர் வெங்கட்பிரபு, “அங்கு என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காமல் இருந்துவிட்டேன். ஓவியாவுக்கு என்ன ஆச்சு ப்ரோ? #சேவ்ஓவியா #பிக்பாஸ்” என்று ட்வீட் செய்திருக்கிறார். ‘பார்ட்டி’ படத்தின் ஷூட்டிங்கிற்காக் பிஜி தீவு சென்றிருக்கும் வெங்கட்பிரபு, 50 நாட்களுக்குப் பிறகே அங்கிருந்து திரும்புகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் பிரபுவின் 'நெருப்புடா' சென்சார் தகவல்கள்