ராஜமௌலி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு என்ன வேடம் தெரியுமா..?

வியாழன், 6 டிசம்பர் 2018 (17:35 IST)
இந்தியாவில் மிக புகழ்பெற்ற இயக்குநர் ராஜமௌலி. அவர் தொட்டது எல்லாம் துலங்கி வருகிறது. கடைசியாக அவர் இயக்கிய பாகுபலி 2 உலகம் முழுக்க வசூலை வாரிக்குவித்தது.
இந்நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என். டி. ஆர். நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படத்திற்கு ஆர்.ஆர்.ஆர்.என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.
 
இதன் படப்பிடிப்பு கடந்த (நவம்பர்) மாதம் 19 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ராஜமௌலி ’ராம ராவண ராஜ்ஜியம் ’என்று (ஆர் .ஆர். ஆர் ) பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் ராம்சரண் ராமனாகவும், ஜூனியர் என். டி. ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
தற்போது இப்படத்தை பற்றிய ஒருமுக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் ராமனுக்கு ஜோடியாக சீதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நிர்வாண போட்டோ வைரல் விவகாரம்: ராதிகா ஆப்தே யாரை பாராட்டினார் தெரியுமா...?