நடிகை பாவனாவுக்கும், கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபருமான நவீனுகும் ஜனவரி 22ஆம் தேதி திருச்சூரில் திருமணம் நடைபெற்றது. பாவனாவின் திருமண நிகழ்வில் பல்வேறு திரைப்பட நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மலையாள திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் பாவனாவுடன் ஓரிரு படங்களில் பணியாற்றிய துணை நடிகை ஒருவர் கலந்துக்கொண்டு, பாவனாவின் தோல் மீது கையை போட்டு அவருக்கு வாழ்த்து சொல்ல வந்தார். அப்போது பாவனா, அவரது கையை தோலில் இருந்து கீழே தள்ளி விட்டார். ஆனாலும் அந்த நடிகை மீண்டும் அவர் மீது கையை வைக்கவே மிகவும் வலுவாக அவரை தள்ளி விட்டு, கோபத்தில் கத்தியுள்ளார் பாவனா.
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.