Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''திருமணம் செய்வதால் சுதந்திரம் இழக்கிறோம் '' -அஜித் பட நடிகை ஓபன் டாக்

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (14:21 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சதா. இவர், ஜெயம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக   நடித்திருந்தார். அதன்பின்னர், அந்நியன், வர்ணஜாலம், எதிரி, பிரியசகி, அஜித்துடன் இணைந்து திருப்பதி, உன்னாலே உன்னாலே  உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி  அவரே தயாரித்து நடித்த படம் டார்ச் லைட். இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

அதன்பின்னர், அவர் ஓட்டல்  நடத்தி வந்த  நிலையில், ஓட்டல் பிசினஸில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும்,   அதை மூடச் சொல்வதாக சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது 39 வயதாகும் சதாவிடம் எப்போது  திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:  ‘’திருமணம் செய்பவர் புரிந்து கொள்ளலாம் இல்லையென்றால் புரியாமல் இருக்கலாம். திருமணம் செய்வதால் சுதந்திரம் இழக்கிறோம்.  நான் விலங்குகளை நேசிக்கிறேன். திருமணம் செய்துகொண்டால் என் ஆசைகளைத் தொடர முடியாது போகலாம், சில திருமணம் வெற்றியடையாமல் பிரிகின்றனர். அதனால், திருமணம் செய்யும் எண்ணம் எனக்கில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி செய்த நடிகர் சிம்பு! எத்தனை லட்சம் தெரியுமா?

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

அடுத்த கட்டுரையில்
Show comments