விஜய்யின் 61 -வது படத்தை அட்லி இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. படத்தின் முக்கியமான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாயகியாக நடிக்க நயன்தாராவிடமும், இசையமைக்க ரஹ்மானிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.