Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் - முன்னணி நடிகர் கடிதம் !

என் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் - முன்னணி நடிகர் கடிதம் !
, புதன், 19 மே 2021 (19:18 IST)
இந்தியாவில் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துவருகின்றனர்.

இந்நிலையில் நாளை ஜூனியர் என்.டி.ஆரின் 38 வது பிறந்தநாள் எனபதால் இப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் எனத் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  ஜூனியர் என்.டி.ஆர் தனது ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரசிகர்களே உங்களின் அன்பும் பிரார்த்தனையும் எப்போதும் என்னைச் சுற்றி வட்டமிட்டுள்ளது. அதற்காக உங்களுக்கான நான் கடமைப்பட்டுள்ளேன். எனது ஒவ்வொரு பிறந்தநாளின்போது நீங்கள் காட்டுன்ம் அன்பு அலாதியானது. அது போற்றப்படத்தக்கது.

ஆனால் தற்போதுள்ள இரண்டாம் கொரொனா பரவலால் நீங்கள் தக்க பாதுக்காப்பு வழிமுறைகளுடன் வீட்டிலேயே இருப்பதுதான் நீங்கள் எனக்களிக்கும் பரிசு ஆகும்.
webdunia

மக்கள் பசியால் கஷ்டப்படும்போது, கொரோனாவுக்கு எதிராக சுகாதாரப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவரகள், , காவலர்கள் சிறப்புடன் பணியாற்றிவரும்போது, நாம் கொண்டாடுவதற்கு இந்து சரியான நேரமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் நெகிழ்சி அடைந்துள்ளனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஜூனியர் என்.டி.ஆர் குறித்து  இன்று இரவு முதல் களைகட்டும் எனத் தெரிகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரவுடி பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்! வைரல் வீடியோ