Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த ‘பீஸ்ட்’ நடிகர்!

jayam
, புதன், 3 ஆகஸ்ட் 2022 (13:46 IST)
பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 30வது திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து விடும் என்பதை பார்த்து வருகிறோம்
 
பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவர் விஜய்யின் ‘பீஸ்ட்’  படத்தில் நடித்து கலக்கலான காமெடி செய்த விடிவி கணேஷ் என்பதும் இன்னொருவர் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நடராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
 ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் வேற லெவல் நடிகர்: பிரபல பாலிவுட் நடிகை பாராட்டு