Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆத்தி... உங்களுக்கு இவ்ளோவ் பெரிய பொண்ணு இருக்கா? VJ ரம்யா வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ!

ஆத்தி... உங்களுக்கு இவ்ளோவ் பெரிய பொண்ணு இருக்கா? VJ ரம்யா வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ!
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (14:11 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.

webdunia

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் ஒர்க் அவுட் வீடியோ போடோக்களை வெளியிட்டு பிரம்மிப்பூட்டுவார்.இந்நிலையில் தற்ப்போது ' தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு " இது யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம் என கேட்க? இணையவாசிகள், ஆத்தாடி உங்களு இந்த வயசுல ஒரு பொண்ணு இருக்கா? என நக்கலடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடடே... கோட் சூட்டில் கெத்து காட்டும் சித்தப்பு - என்னப்பா ஆண்களெல்லாம் இறங்கிடீங்க!