Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதென்னடா வாத்தி பாடலுக்கு வந்த சோதனை.. வீட்டை கூட்ட சொன்னா துடைப்பத்தால் அடிக்குறாங்க...?

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (15:58 IST)
தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய  ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார். தற்போது கொரோனா லாக் டவுனில்  24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது விஜே ரம்யா வீட்டை சுத்தம் செய்துகொண்டே மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்தால் நடனமாடுவது போன்றும் இல்லை... வீட்டை சுத்தம் செய்வது போன்றும் இல்லை ...மாறாக,  வீட்டிற்கு பேய் ஓட்டுவது போல் உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lately I have started retrospecting this #QuarantineLife and focusing on consciously making it my time to accept the reality and stop complaining ,heal,be grateful for being in a better place and find happiness in the little things

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments