Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கு தேவைப்பட்ட நேரம் அந்த பரதேசிய காணோம் - கதறி அழும் டிடி - வீடியோ

எனக்கு தேவைப்பட்ட நேரம் அந்த பரதேசிய காணோம் - கதறி அழும் டிடி - வீடியோ
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (08:54 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.

எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி. சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர்.

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் தற்ப்போது " ரகிட ரகிட ரகிட" பாடலுக்கு டப்ஸ்மாஸ் செய்த வீடியோவை வெளியிட்டு "உண்மையான உணர்ச்சிகள்" என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். ஒருவேளை இந்த பாடலின் லிரிக் " அவரது முன்னாள் கணவருக்கோ..? என கொளுத்திப்போட்டு வருகின்றனர் இணையவாசிகள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Exact mind voice True emotions


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவர் மீது ஏறி அமர்ந்து குறும்பு பண்ணும் நமீதா - கேட்டால் Romance'ஆம்!