Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முஸ்தப்பா முஸ்தப்பா don't worry.... ப்பாஹ் நம்ம பாவனாவிற்கு இவ்வளவு திறமையா! - வீடியோ!

Advertiesment
முஸ்தப்பா முஸ்தப்பா don't worry.... ப்பாஹ் நம்ம பாவனாவிற்கு இவ்வளவு திறமையா!  - வீடியோ!
, வியாழன், 16 ஏப்ரல் 2020 (11:24 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது.

சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட மாஸ்டர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது காதல் தேசம் படத்தில் வரும் "முஸ்தப்பா முஸ்தப்பா" பாடலை சூப்பராக பாடி அசத்தியிருக்கிறார் பாவனா. இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் அள்ளுது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா: இத்தோடு விட்டுவிடு... வைரலாகும் நடிகர் வடிவேலுவின் எமோஷனல் வீடியோ!