Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகிபாபுவை அடுத்த 'தளபதி 63' படத்தில் இன்னொரு பிரபல காமெடி நடிகர்

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (18:27 IST)
ஒருபக்கம் பொங்கல் படங்களான 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' திரைப்படங்கள் மாஸ் செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் 'தளபதி 63' படத்தின் அப்டேட்டுக்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள் 'கதிர்'', யோகிபாபு மற்றும் ரோபோ சங்கரின் மகள் ஆகியோர் சமீபத்தில் இணைந்த செய்தி இணையதளங்களில் வைரலாகியது தெரிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தில் தற்போது நடிகர் விவேக் இணைந்துள்ளார். இதனை ஏஜிஎஸ் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தில் யோகிபாபு, விவேக் ஆகிய இரண்டு முன்னணி காமெடி நடிகர்கள் இருப்பதால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வேளியாகவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments