Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விஸ்வாசம்' டீசர் எப்போது? இயக்குனர் சிவா தகவல்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (09:21 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விஸ்வாசம்' படத்தின் அனைத்து பாடல்களும் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் டீசரை அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சிவா, 'இன்னும் பத்து நாட்களில் 'விஸ்வாசம்' டீசரை எதிர்பார்க்கலாம் என்று கூறினார். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டீசர் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்சாருக்கு சென்றுவந்த பின் டீசர் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

அனேகமாக 'விஸ்வாசம்' டீசர் கிறிஸ்துமஸ் முடிந்த ஓரிரு நாளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தின் டீசரும், பாடல்கள் வீடியோ போலவே யூடியூபில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

அடுத்த கட்டுரையில்
Show comments