Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விஸ்வாசம்’ ரிலீஸ் போன ஆண்டா? இந்த ஆண்டா? குழம்பிய பாடலாசிரியர்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (09:04 IST)
விசுவாசம் படம் குறித்து எனக்கு மிகப்பெரிய சந்தேகம் உள்ளது என பாடலாசிரியர் அருண்பாரதி தனது டுவிட்டரில் 'விஸ்வாசம்’ திரைப்படம் குறித்து பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
'விஸ்வாசம்’ திரைப்படம் இந்த ஆண்டுதான் வெளியானதா? அல்லது கடந்த ஆண்டுதான் வெளியானதா என்ற மிகப்பெரிய சந்தேகம் தனக்கு இருப்பதாக பாடலாசிரியர் அருண்பாரதி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
 
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: விஸ்வாசம் சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டுதான் வெளியானதா? என குழப்பமே வந்து விட்டது. ஒவ்வொரு முறை  தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் போதும்  நேற்றுதான் படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடுவதும், தொலைபேசியில் அழைத்து பாராட்டுவதும் மிகுந்த உற்சாகம் தருகிறது. அன்பு நன்றிகள்
 
இந்த படத்தில் ’டங்கா டங்கா டங்கா’ என்ற பாடலை பாடலாசிரியர் அருண்பாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சன் டிவியில் இந்த திரைப்படம் ஒளிபரப்பானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் இதனை குறிப்பிட்டுத்தான் அருண்பாரதி இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியாக இன்னும் ஒரு ஆண்டு ஆகுமா? என்ன காரணம்?

2வது நாளே திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட தனுஷின் 'இட்லி கடை' . 'காந்தாரா' காரணமா?

கரூர் சம்பவம் எதிரொலி.. ஜனநாயகன் படத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம்..!

சிம்பு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க..! - கலைப்புலி தாணு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்