அடுத்தாண்டு பொங்கலுக்கு பேட்ட படம் ரிலிஸ் ஆவதால் ஒதுங்கும் என நினைத்த விஸ்வாசம் திரைப்படக் குழ்வினர் அதிரடி முடிவை அறிவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலக வழக்கப்படி பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது விநியோகஸ்தர்கள் அதிக அளவிலான திரையரங்குகளில் படத்தினை ரிலீஸ் செய்து கூடுமானவரை முதல் மூன்று நாட்களிலேயே வசூல் பார்த்து விட வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு சமீபத்தைய உதாரனம், சர்கார்.
அஜித ஓராண்டுக்குப் பின் தற்போது நடித்து முடித்துள்ள விஸ்வாசம் படம் சில மாதங்களுக்கு முன்பே பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டது. எனவே பொங்கலுக்கு வருவதாக இருந்த மற்ற படங்கள் ஒதுங்கிக் கொண்டன. தற்போது திடீர் திருப்பமாக பொங்கலுக்கு ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படமும் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
எனவே இரண்டு பெரிய படங்கள் மோதினால் திரையரங்கு ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்படும் என்பதால், அஜித்தின் விஸ்வாசம் இந்த ரேஸில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஸ்வாசம் தயாரிப்பாளர்களோ நாங்கள் முன்பே விநியோகஸ்தர்களுக்கு வாக்களித்து விட்டோம். அவர்களும் படம் பொங்கலுக்கு வருவதையே விரும்புகின்றனர். அதனால் விஸ்வாசம் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும் என உறுதி அளித்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் ரஜினியின் பேட்ட திரைப்படத்திற்கு இப்போது பிரச்சனை ஆரம்பித்துள்லது. ஒன்று, விஸ்வாசம் படத்தோடு தியேட்டர்களைப் பகிர்ந்துகொண்டு பொங்கல் அன்று வெளிவரவேண்டும் அல்லது அதிக தியேட்டர்களுக்காக தனது ரிலீஸை பின்நோக்கித் தள்ள வேண்டும்.