Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'விஸ்வாசம்' படத்தில் வைரலாகும் அஜித், நயன்தாராவின் புதிய ஸ்டில்

Advertiesment
'விஸ்வாசம்' படத்தில் வைரலாகும் அஜித், நயன்தாராவின் புதிய ஸ்டில்
, வெள்ளி, 7 டிசம்பர் 2018 (10:39 IST)
பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட தல அஜித்தின் விஸ்வாசம் குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் தியேட்டர்களை மொத்தமாக வளைத்துபோட்டதோடு காரியம் முடிந்தது என்று இல்லாமல், டீசர், டிரெய்லர், ஆடியோ, சிங்கிள் டிராக், என பரபரப்பை ஏற்ற வேண்டும் என அஜித் ரசிகர்கள், விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனத்தை இன்றுவரை முற்றுகையிட்டு வருகிறார்கள்.  அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட கலக்கி வருகிறது. சமூக வலைதளத்தை திறந்தாலே இரண்டு போஸ்டில் ஒன்று மரண மாஸ் பாடலை பற்றியதாகவும், ரஜினியை பற்றியதாகவும் இருக்கிறது.


 
இதனால் பேட்ட படத்தோடு போட்டியில் இருக்கும் அஜித்தின் விஸ்வாசம் இனி அதிரடியை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தல அஜித்துடன், நயன்தாரா டிராக்டரில் செல்லும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதில் அஜித் வேட்டி சட்டை அணிந்து டிராக்டரில் வயலை உலுகிறார். அந்த டிராக்டரில் கிராமத்து கண்டாங்கி சேலை கட்டி நயன்தாரா சிரித்தபடி காணப்படுகிறார். இந்த புகைப்படம் இன்று நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தளபதி 63' படத்திற்காக யோகிபாபு வாங்கிய சம்பளம்