Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பிரிண்ட் - கமல்ஹாசன் தகவல்

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (12:42 IST)
ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கும் பிரிண்ட் போடப்பட்டுள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், “விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியும் நீட்சியும் மாத்திரம் மட்டுமல்ல ‘விஸ்வரூபம் 2’. அதன் முன்கதையும் இதில் இருக்கிறது. 
 
பல்லாயிரம் பிரிண்டுகளுடன் இந்தியா முழுவதும் இந்தப் படம் வெளிவர இருக்கிறது. உலகம் முழுவதும் என்பது கொஞ்சம் பகட்டாகத் தோன்றினாலும், அதுவும் உண்மைதான். ஒரு ஹாலிவுட் படம் எத்தனை பிரிண்டுகள் போடப்படுகிறதோ, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான பிரிண்டுகள் ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கும் போடப்பட்டுள்ளது என்பது பெரிய விஷயம்.
 
தமிழ்ப் படங்கள், உலகமெங்கும் பார்க்கப்படும் படங்களாக கூடிய விரைவில் மாறவேண்டும். அப்படிப் படங்கள் வந்து கொண்டிருக்கும்போது எங்கோ ஒரு மூலையில் சரித்திரத்தில் ராஜ்கமலின் பெயர் இடம்பெற்றால், நாங்கள் வாழ்ந்ததும் உழைத்ததும் வீண்போகவில்லை என்று நம்புவோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments