Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'விஸ்வரூபம் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'விஸ்வரூபம் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு
, திங்கள், 11 ஜூன் 2018 (10:16 IST)
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணியில் பிசியாக இருந்தாலும் அவர் நடித்து முடித்துள்ள படம் மற்றும் கமிட் ஆகிய படங்களை முடித்து வெளியிடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசனின்  'விஸ்வரூபம் 2' திரைப்படம் சென்சார் பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளின் டிரைலர்களை ஸ்ருதிஹாசன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அமீர்கான் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெள்ளியன்று வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த விடுமுறையை கணக்கில் கொண்டு இந்த படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
webdunia
கமல்ஹாசன் நடித்து, இயக்கி தயாரித்துள்ள இந்த படத்தில்  பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ்,உள்பட பலர் நடித்துள்ளனர்.  ஜிப்ரான் இசையில் உருவான இந்த படம் 'தூங்காவனம்' படத்தை அடுத்து இரண்டரை ஆண்டுக்கு பின்னர் வெளிவரும் கமல் படம் என்பது குறிப்பிடத்தக்கது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபுதேவாவின் அடுத்த படத்தில் விஜய் பட வில்லன்