Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘விஸ்வரூபம்-2’ படத்தின் கிளைமாக்ஸ் எங்க நடக்கப்போதுனு தெரியுமா?

‘விஸ்வரூபம்-2’ படத்தின் கிளைமாக்ஸ் எங்க நடக்கப்போதுனு தெரியுமா?
, சனி, 6 மே 2017 (12:16 IST)
‘விஸ்வரூபம்-2’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் படம்பிடிக்கத் தயாராகி வருகின்றனர் படக்குழுவினர். கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்த ‘விஸ்வரூபம்’, கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. அந்த வருடமே இரண்டாம் பாகத்தையும் ஷூட் செய்தனர். ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால், படம் பாதியிலேயே நின்றது. இதனால், அதுவரை படத்துக்கு ஆன செலவை தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டு, படத்தின் உரிமையை வாங்கிவிட்டார் கமல்.


 

எனவே, படத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள், துரித கதியில் நடைபெற்று வருகின்றன. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படம் பிடிக்கப்படாததால், அதை முதலில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இதற்காக, சென்னை புனித தோமையார் மலையில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 10 நாட்களுக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். அங்குதான் கிளைமாக்ஸ் காட்சி படம்பிடிக்கப்பட இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 வயசுல இருந்தே காதலிக்கிறாராம் டாப்ஸி…