Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித் நடித்த இருந்த படத்தில் விஜய்? இதுதான் தளபதி 65 படமா?

அஜித் நடித்த இருந்த படத்தில் விஜய்? இதுதான் தளபதி 65 படமா?
, வியாழன், 21 நவம்பர் 2019 (22:58 IST)
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி 64’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாளில் இந்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும், இதனை அடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதன் பின்னர் வெளிநாட்டிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி ’தளபதி 64’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்பதால் விஜய் தற்போது ’தளபதி 65’ படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யை இயக்குனர் விஷ்ணுவர்த்தன் சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்து இருந்தால் உடனடியாக அதற்கான பணிகளை தொடங்க விஜய் ஒப்புதல் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது 
 
இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜித்துக்காக எழுதி வைத்த கதை தான், இந்த கதை என்றும் இந்த படத்தில் விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் இந்த படத்தை எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்து பல வெற்றிப்படங்களை தயாரித்து வரும் ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!