அஜித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (10:39 IST)
தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் வினோத் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்ததும் தொடங்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வலிமை படத்தை அடுத்து வினோத் இயக்கும் இன்னொரு படத்திலும் அஜீத் நடிப்பார் என்று கூறப்பட்டது ஆனால் இந்த தகவல் தற்போது மாறியுள்ளது 
 
அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே அஜித்துக்காக ராஜராஜ சோழன் கதை ஒன்றை தயார் செய்து விஷ்ணுவர்த்தன் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் அந்தப் படம்தான் தான் அஜித்தின் அடுத்த படமா? அல்லது விஷ்ணுவர்த்தனின் புதிய கதையில் அஜித் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் உறுதியாக இல்லை. இருப்பினும் அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் தான் இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அஜித் ஏற்கனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாகவும், இந்த படம் ‘என்னை அறிந்தால் 2’ என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments