Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணுவர்தன் இயக்கும் அடுத்த படத்தின் லேட்ட்ஸ்ட் அப்டேட்!

vinoth
சனி, 10 பிப்ரவரி 2024 (12:01 IST)
அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அவர் அதன் பின்னர் பல படங்களை இயக்கினாலும் எந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அஜித்துக்காக எழுத்தாளர் பாலகுமாரனோடு இணைந்து ஒரு வரலாற்றுக் கதையை எழுதி வைத்திருந்தார். ஆனால் ஏனோ அந்த படம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லையாம்.

சமீபத்தில் அவர் தமிழில் அதர்வாவின் தம்பியை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கேமரூன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த  படத்தை முடித்தவுடன் அடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை விஷ்ண்வர்தன் இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments