Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்சி படம் பற்றி ஒன்றும் தெரியவில்லை – விஷ்ணு விஷால் அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (07:53 IST)
தெலுங்கில் வெற்றி பெற்ற ஜெர்சி படத்தின் தமிழ் ரீமேக்கின் நிலைப் பற்றி நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ஜெர்சி என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 36 வயது என்பது கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கான வயது. அந்த வயதில் இந்திய அணியில் இடம்பிடிக்க போராடும் ஒரு கிரிக்கெட் வீரனின் கதையே ஜெர்ஸி. இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் ரீமேக் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க இருந்தார். இவரும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் இந்தப்படத்தில் நடிக்க இவரைத் தேர்வு செய்தனர்.

ஆனால் அதன் பின்னர் அந்த படம் பற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரசிகர் ஒருவர் அந்த படத்தின் தற்போதைய நிலை என்ன எனக் கேட்க, அதற்கு விஷ்ணு விஷால் ‘எந்த தகவலும் இல்லை சகோ, எல்லாம் நன்றாக சென்றுகொண்டு இருந்தது. ஆனால் அதற்கான இடத்துக்கு செல்லவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments