Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலியுடன் மாலத்தீவு பயணம்… சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்!

காதலியுடன் மாலத்தீவு பயணம்… சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்!
, வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:34 IST)
நடிகர் விஷ்ணு விஷால் தனது காதலி ஜூவாலா கட்டாவுடன் சேர்ந்து மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தற்போது விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது  சமூக வலைதளங்களில் தங்கள் ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் ‘ஒரு தராசில் ஒரு பக்கம் இதயமும் மறுபக்கம் பணமும் இருக்க, பணம் இருக்க தராசுப் பக்கம் கீழே இருப்பது போல உள்ளது.’ இதன் மூலம் பணத்தை விட காதல் பெரிதில்லை என்று சொல்வது போல உள்ளது. இதனால் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா ஆகியோருக்கு இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால் அது பொய் என்று நிரூபிக்கும் விதமாக விஷ்ணு விஷால் இப்ப்போது ஜூவாலா கட்டாவுடன் மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் நடித்தால் மட்டுமே பாபநாசம் 2- நடிகை ஸ்ரீப்ரியா தகவல்!