Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேட்மிண்டன் வீராங்கனையுடன் நெருக்கம் உண்மைதான், ஆனால்... விஷ்ணு விஷால்

Advertiesment
பேட்மிண்டன் வீராங்கனையுடன் நெருக்கம் உண்மைதான், ஆனால்... விஷ்ணு விஷால்
, வியாழன், 6 ஜூன் 2019 (09:34 IST)
நடிகர் விஷ்ணுவிஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்து கொண்ட இரண்டு செல்பி புகைப்படங்களை பதிவு செய்தார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் விஷ்ணு, அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விரைவில் ஜூவாலாவை விஷ்ணு திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவியது
 
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது விளக்கத்தை அளித்துள்ளார். ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமான நட்பு இருப்பது உண்மைதான். அவருக்கும் எனக்கும் இருக்கும் பொதுவான நண்பர்களுடன் நாங்கள் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்து பேசிக்கொண்டிருப்போம். ஆனால் இது நட்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்லுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்னர்தான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு இருவரும் அவரவர் துறையில் முழு கவனம் செலுத்தி கொண்டிருக்கின்றோம் என்பது மட்டுமே உண்மை என்று கூறியுள்ளார்.
 
பேட்மிண்டன் வீராங்கனையுடன் காதல் இல்லை என்று விஷ்ணு விஷால் மறுக்காததால் விரைவில் நல்ல செய்தி வரும் என்று திரையுலகினர் கூறி வருகின்றனர். விஷ்ணுவிஷால் தற்போது 'ஜகஜால கில்லாடி', 'காடன்' மற்றும் விக்ராந்த் உடன் ஒரு படம் என திரையுலகில் பிசியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவுடன் மீண்டும் இணையும் யுவன்ஷங்கர் ராஜா!