சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு ஐசரி கணேஷ் தயாரிப்பில் 2 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டிருந்தார் சிம்பு. அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இன்னொரு படமாக தொடங்கப்பட்ட இயக்குனர் கோகுலின் ‘கொரோனா குமார்’ திரைப்படத்தில் அவர் நடிக்காமல் வெளியேறினார். இது சம்மந்தமாக சிம்பு மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு இடையில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இப்போது இயக்குனர் கோகுல் விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட கொரோனா குமார் திரைப்படம்தான் என தகவல்கள் பரவின. ஆனால் அதை இயக்குனர் கோகுல் தரப்பு மறுத்துள்ளது. மேலும் “கொரோனா குமார் படத்துக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்” எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு vibe குமார் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் கொரோனா குமார் படத்துக்கும் இந்த கதைக்கும் சம்மந்தம் இருக்குமா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.