Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற விஷ்ணு விஷாலின் தந்தை!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (11:39 IST)
சூரி கொடுத்த புகாரில் முன் ஜாமீன் கோரியிருந்த விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா இப்போது அதை திரும்ப பெற்றுள்ளார்.

நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா என்பவர் மீது நடிகர் சூரி சமீபத்தில் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் ரமேஷ் குடவாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் ரமேஷ் குடவாலாவின் முன்ஜாமீனுக்கு சூரி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்போது ரமேஷ் குடவாலா தனது முன் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அறிவித்துள்ள விஷ்ணு விஷால் ‘என் தந்தை தன்னுடைய முன் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். சூரிக்கும் அன்புவேலனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்கு நீதித்துறை, காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது நம்பிக்கை உண்டு’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments