விஷ்ணு விஷாலின் தந்தை தனக்குத் தரவேண்டிய பணத்தை மட்டும் கொடுத்தால் போதும் நடவடிக்கை வேண்டாம் என நடிகர் சூரி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி சமீபத்தில் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் ரமேஷ் குடவாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த நிலையில் ரமேஷ் குடவாலாவின் முன்ஜாமீனுக்கு சூரி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து சூரி மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனை அடுத்து சூரி, முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ரூ.2.7 கோடி பண மோசடி செய்தததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் மீது நடிகர் சூரி அளித்த புகார் தொடர்பான வழக்கில் இருந்து நீதிபதி ஜெகதீஸ் சந்திரா அறிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனது முன் ஜாமீன் மனுவைத் திரும்பப் பெறுவதாக ரமேஷ் குடவாலா தரப்பில் கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தார். அதையடுத்து, தயாரிப்பாளர் அன்புவேல் முன் ஜாமீன் மனு தொடர்பாக நவம்பர் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு செனை மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் விசாரணையின்போது, நடிகர் தரப்பில் நீதிபதி, இந்த வழகில் பணம் கொடுத்தால் போதுமா? அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா எனக் கேட்டனர்.
இதற்குப பதிலளித்த சூரி, பணம் திரும்பக் கிடைத்தால் போதும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது எனது நோக்கமல்ல்ல என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் இவ்வழக்கின் விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.