Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமூக விலகளால் பிரிந்த விஷ்ணு விஷால் சோகத்தில் காதலி...!

Advertiesment
சமூக விலகளால் பிரிந்த விஷ்ணு விஷால் சோகத்தில் காதலி...!
, ஞாயிறு, 29 மார்ச் 2020 (12:50 IST)
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவர் நடிகை அமலாபாலை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது. ஆனால் இதனை விஷ்ணு விஷால் கடுமையாக மறுத்தார்.

அதையடுத்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலிப்பதை நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு உறுதி செய்தார். இந்நிலையில் தற்போது கொரோனா பரவுதலில் இருந்து ஒருவரை ஒருவர் தற்காத்துக்கொள்ள social distancing கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் ஜூவாலா குட்டா விஷ்ணு விஷாலை பிரிந்திருப்பதால் சோகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் Missing my boo என்று கூறியுள்ளார். அதற்கு ரிப்ளை செய்துள்ள விஷ்ணு விஷால், பரவாயில்லை இப்பொழுது இந்த சமூக விலகல் மிகவும் முக்கியம்... எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய் என பொறுப்புடன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பு நடவடிக்கை ...நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்