Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடங்கியதா விஷ்ணுவர்தன் இயக்கும் அடுத்த படம்?

தொடங்கியதா விஷ்ணுவர்தன் இயக்கும் அடுத்த படம்?
, செவ்வாய், 21 மார்ச் 2023 (16:31 IST)
அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த விஷ்ணுவர்தன், மீண்டும் அஜித் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அந்த படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

இந்நிலையில் விஷ்ணுவர்தன், ஏற்கனவே ஒத்துக்கொண்ட படத்தை தற்போது தொடங்கியுள்ளார். மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடிகர் முரளியின்  இளையமகன் அகில் நடிக்கும் இந்த படத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஷ்ணுவர்தன் கடைசியாக தமிழில் இயக்கிய படம் விஷால் நடித்த யட்சன் திரைப்படம் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தம்பியை ஹீரோவாகும் நடிகர் விஷ்ணு விஷால்?