திரைத்துறைக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கட்டும்… ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன விஷால்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (18:39 IST)
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெரும் நிலையில் இருக்கும் நிலையில் நடிகர் விஷால் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கபோவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் உதயநிதி ஸ்டாலின் நண்பருமான விஷால் தனது டிவீட்டில் ‘ அற்புதமான வெற்றியை எதிர்நோக்கும் திமுக வுக்கு வாழ்த்துகள். என் இனிய நண்பர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். நமது புதிய முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நல்வரவு. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகம் நல்ல விஷயங்களோடு முன்னேறட்டும். அபாய நிலையில் இருக்கும் திரைத்துறைக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கட்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments